
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை சற்றே ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 94 புள்ளிகள் (0.14 சதவீதம்) உயர்வடைந்து 67,221 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 3 புள்ளிகள் (0.02 சதவீதம்) சரிந்து 19,993 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. என்றபோதிலும் வர்த்தக நேரத்தின்போது வீழ்ச்சி அடைந்தது. காலை 10:40 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 89.99 புள்ளிகள் சரிவடைந்து 67,037.09 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 44.95 புள்ளிகள் சரிந்து 19,951.40 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment