
சென்னை: மலபார் கோல்டு அண்டு டைமண்ட் ஜூவல்லரியில் `நவரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட நகைகள் திருவிழா' வரும் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து மலபார் குழுமத்தின் தலைவர் எம்.பி. அகமது கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஷோரூம்களிலும் நவரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. வரும் 17-ம் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் இடம் பெற்றுள்ள பல்லாயிரக்கணக்கான கம்மல், இயற்கையான கற்கள், சான்றளிக்கப்பட்ட நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட நகைகள் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளிக்கும். அந்த அளவுக்கு அவை தரமான நகைகளாகும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment