About

மீண்டும் ரூ.47 ஆயிரத்தை எட்டியது ஒரு பவுன் தங்கம் விலை

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.47,040-க்கு விற்பனையாகிறது. கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.42,760-க்கு விற்பனையானது. 26-ம் தேதி ரூ.43,040 ஆக அதிகரித்தது.

பின்னர், கடந்த ஆண்டு பிப். 2-ம் தேதி ஒரு பவுன் ரூ.44,040 என்ற புதிய உச்சத்தை எட்டி விற்பனையானது. தொடர்ந்து மார்ச் 5-ம் தேதி ரூ.45,520-ஆகவும், ஜுன் மாதம் 4-ம் தேதி ரூ.46 ஆயிரமாகவும் உயர்ந்தது. பின்னர், டிசம்பர்23-ம் தேதி பவுன் ரூ.47 ஆயிரமாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. பின்னர் தங்கம் விலை குறைந்து ரூ.46 ஆயிரத்துக்குள் விற்பனை ஆனது. இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: