
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (திங்கள்கிழமை) ஏற்ற இறக்கமின்றித் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 191 புள்ளிகள் உயர்வடைந்து 65,579 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 71 புள்ளிகள் உயர்ந்து 19,507 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. என்றாலும் வர்த்தக நேரத்தின் போது சென்செக்ஸ் ஏற்ற இறக்கம் கண்டது. காலை 10:43 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 21.74 புள்ளிகள் சரிவடைந்து 65,365.42 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 14.15 புள்ளிகள் உயர்ந்து 19,449.45 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment