
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 555 புள்ளிகள் (0.86 சதவீதம்) உயர்வடைந்து 65,387 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 181 புள்ளிகள் (0.94 சதவீதம்) உயர்ந்து 19,435 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்ற இறக்கமின்றி தொடங்கிய போதிலும் வர்த்தக நேரத்தின்போது உயர்வடைந்தன. காலை 11:14 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 211.77 புள்ளிகள் உயர்வடைந்து 65,043.18 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 86.00 புள்ளிகள் உயர்ந்து 19,339.80 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment