
புதுடெல்லி: சைபர் மோசடிகளைத் தடுக்க, டிஜிட்டல் பரிவர்த் தனை நடைமுறையில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரிசர்வ் வங்கி, பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள், கூகுள், ரேசர்பே போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுடன் நேற்று மத்திய அரசு கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தியது. டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் நடைபெறும் மோசடிகளைத் தடுப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. அப்போது, ரூ.2,000-க்கு மேல் முதன்முறையாக ஒரு கணக்குக்கு பரிவர்த்தனை செய்வதற்கு 4 மணி நேரம் அவகாசம் வழங்கினால், மோசடிகளைக் குறைக்க முடியும் என்று யோசனை முன்வைக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment