
புதுடெல்லி: ‘டிஜிட்டல் விளம்பரக் கொள்கை 2023’-க்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்த மத்திய அரசின் செய்திக் குறிப்பு: சிபிசி (CBC) எனப்படும் மத்திய மக்கள் தொடர்பகத் துறைக்கு டிஜிட்டல் மீடியா பிரச்சாரங்களை மேற்கொள்ள ஏதுவாக ‘டிஜிட்டல் விளம்பரக் கொள்கை 2023-க்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. டிஜிட்டல்மயமாக்கலுக்கு ஏற்ப மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து தகவல்களைப் பரப்புவதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ‘சிபிசி’-யின் பணியில் இந்தக் கொள்கை ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது.
சமீபத்திய ஆண்டுகளில், பார்வையாளர்கள் ஊடகங்களைப் பயன்படுத்தும் விதம் டிஜிட்டல் இடத்தை நோக்கிய மாற்றத்தைக் கண்டுள்ளது. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் நாட்டில் இப்போது இணையம், சமூக மற்றும் டிஜிட்டல் ஊடக தளங்களுடன் இணைக்கப்பட்டு மிகப் பெரிய வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. மார்ச் 2023 நிலவரப்படி தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1172 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment