
புதுடெல்லி: நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மூலமாக கிடைத்த வருவாய் ரூ.1.62 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. இது,கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வசூலான ரூ.1.47 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது 10 சதவீதம் அதிகம் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், நடப்பு நிதியாண்டில் நான்காவது தடவையாக செப்டம்பரிலும் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.6 லட்சம் கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. செப்டம்பரில் மொத்தம் வசூலான ஜிஎஸ்டி ரூ.1,62,712 கோடியில் மத்திய ஜிஎஸ்டி ரூ.29,818 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ.37,657 கோடியாகவும் இருந்தன. இவை தவிர, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.83,623 கோடியாகவும், செஸ் ரூ.11,613 கோடியாகவும் இருந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment