
சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசலில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் தமிழகத்தில் பெரிய காய்கறி மார்க்கெட்டில் ஒன்றாகும். இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகளும், விவசாயிகளும் பங்கேற்கின்றனர். வெளியிடங்களில் இருந்து கொண்டு வரும் சின்னவெங்காயம் மற்றும் காய்கறிகளை சில்லறை வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்,
தற்போது மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் கருமந்துறை, ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment