
புதுடெல்லி: வரும் 2024 தேர்தலில் பாஜக தோற்கும்பட்சத்தில் பங்குச் சந்தைகளில் 25 சதவீதம் என்ற அளவில் மிகப்பெரிய சரிவு ஏற்படும் என்றுஉலகப் புகழ்பெற்ற சந்தை நிபுணரான கிறிஸ் வுட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “வரவிருக்கும் காலங்கள் தேர்தலுக்கானது என்பதால் முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். வலுவான ஆட்சி நிலையால் தற்போது சந்தை புதிய உச்சங்களை தொட்டுள்ளது. இருப்பினும் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் உள்ளிட்ட நிலவரங்களால் சந்தையில் அதிகமான ஏற்ற இறக்க நிலை காணப்படுகிறது. அந்நிய முதலீடுகளும் அதிக அளவில் வெளியேறி வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment