
புதுடெல்லி: சில தினங்களுக்கு முன்பு செக் நாட்டில் நடைபெற்ற உலக சாலை மாநாட்டில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “இந்திய வாகனத் துறை மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. 9 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய வாகன சந்தை மதிப்பு ரூ.4.5 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது அது ரூ.12.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. உலகளாவிய வாகனத் துறையில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா மூன்றாம் இடம்பிடித்துள்ளது. சீனா முதல் இடத்திலும் அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்நிலையில் அடுத்த 4 ஆண்டுகளில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதல் இடம் பிடிக்கும்” என்று தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment