
புதுடெல்லி: உள்நாட்டைச் சேர்ந்த இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட்(எச்ஏஎல்) நிறுவனத்திடம் இருந்து, மேலும்156 ‘பிரசந்த்’ இலகு ரக ஹெலிகாப்டர்களை வாங்க ராணுவமும், விமானப்படையும் முடிவு செய்துள்ளன.
பொதுத்துறை நிறுவனமான எச்ஏஎல் 5.8 டன் எடையில் ‘பிரசந்த்’ என்ற பெயரில் இலகுரக ஹெலிகாப்டரை தயாரித்துள்ளது. இதில் 20 எம்.எம் குண்டுகளை பயன்படுத்தக் கூடிய துப்பாக்கி, 70 எம்எம் ராக்கெட் குண்டுகள் மற்றும் வான் தாக்குதலுக்கான ஏவுகணைகளை வீசும் வசதிகள் உள்ளன. ஆயுதங்களுடன் இந்த ‘பிரசந்த்’ இலகு ரக ஹெலிகாப்டர் 16,400 அடி உயரம் பறக்கும் திறன் வாய்ந்தது. உலகிலேயே, தாக்குதல் நடத்தும் திறனுடன் கூடிய ஒரே இலகு ரக ஹெலிகாப்டர் இதுதான். இதில் 45 சதவீதபாகங்கள் உள்நாட்டில் தயாரானவை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment